சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு புறமும் சுவர்கள் இல்லாத பூஜ்ஜிய ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் Valais என்னும் மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பூஜ்ஜிய ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில் சுவர்கள் மற்றும் கூரைகள் இல்லை. Riklin என்னும் இரட்டை சகோதரர்கள் இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுபற்றி அவர்கள் தெரிவித்ததாவது, தங்களிடம் வசதிகள் அனைத்தும் இருந்தும் சிறிய விஷயங்களையும் மக்கள் குறையாக கருதுகிறார்கள்.
உலகில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றம், போர் மற்றும் தாங்கள் குறையின்றி வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்பு போன்ற மிகப்பெரிய பிரச்சனைகளையும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹோட்டலில் அறைகள் கிடையாது. இரண்டு பேர் மட்டுமே படுக்கும் வசதியுடைய கட்டில் ஒன்று, நாற்காலிகள் இரண்டு, மேஜை விளக்குகள் இரண்டு மட்டும் தான் உள்ளது. காலை உணவு மற்றும் குளிர் பானங்கள் கொடுக்கப்படும்.
ஒரு நாள் இரவில் தங்க 325 சுவிஸ் பிராங்குகள் செலுத்த வேண்டும். இத்திட்டமானது அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.