Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில்… பாகிஸ்தான் அபார வெற்றி …!!!

ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது  டி20 போட்டியில் , 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், மூன்று  டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று கடைசி டி20 போட்டி  ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ,முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது.

குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய  மொகமது ரிஸ்வான் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். கேப்டன் பாபர் அசாம் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 166 ரன்களை ,வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |