இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. தவான் 113 பந்துகளில் 81 ரன்களும், கில் 72 பந்தில் 82 ரன்களும் எடுத்தனர். ஷிகர் தவான் மற்றும் ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடியதன் மூலம் 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்ற நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது..
இந்நிலையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே ஆன இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே ஹராரே மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மதியம் 12 45 மணியளவில் நடைபெற இருக்கிறது.. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி களமிறங்க உள்ளது..அதே நேரத்தில் இந்த போட்டியில் கட்டாயம் வென்று ஆக வேண்டும் என்று ஜிம்பாப்வே அணி களம் இறங்குகிறது…
எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. முன்னதாக ஜிம்பாவே கேப்டன் அடுத்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் களமிறங்கும் கணிக்கப்பட்ட வீரர்கள் :
கே.எல். ராகுல் (c ), ஷிகர் தவான், சுப்மன் கில், இஷான் கிஷன் (w.k ), சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
ஜிம்பாப்வே அணியில் களமிறங்கும் கணிக்கப்பட்ட வீரர்கள் :
தடிவானாஷே மருமணி, தகுத்ஸ்வானாஷே கைடானோ, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (c &wk), டோனி முனியோங்கா, லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியாச்சி, ரிச்சர்ட் ங்காரவா.