Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : 1 விக்கெட்டும் போகல…. தவான்- கில் அபாரம்….. கெத்தாக வென்ற இந்தியா…!!

ஜிம்பாப்வே அணியை 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து வென்றது இந்திய அணி.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் இந்திய நேரப்படி மதியம் 12: 45 மணியளவில் தொடங்கியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக இன்னசென்ட் கையா மற்றும் தடிவானாஷே மருமணி ஆகிய இருவரும் களமிறங்கினர். இந்த தொடக்கம் சரியாக அமையவில்லை.. இருவருமே சொற்ப ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அந்த அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும்  இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரெஜிஸ் சகாப்வா 35 ரன்கள் எடுத்தார். மேலும்  ரிச்சர்ட் ங்கராவா 34 ரன்களும்,  பிராட் எவன்ஸ் 33 ரன்களும் எடுத்தனர்.. இந்திய தரப்பில் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்னா, அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டை பறி கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். ஜிம்பாப்வே அணியால் இவர்களது ஜோடியை பிரிக்கவே முடியவில்லை.. தவான் பொறுப்புடன் ஆட, எதிர் திசையில் நின்ற சுப்மன் கில் அதிரடியாக விளாசினார். இறுதியில் இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து வென்றது. தவான் 113 பந்துகளில் 81 ரன்களுடனும் (9 பவுண்டரி), சுப்மன் கில்  72 பந்துகளில் 82 ரன்களுடனும் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) களத்தில் இருந்தனர்.

Categories

Tech |