Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய (30.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

இன்றைய  பஞ்சாங்கம்

30-07-2020, ஆடி 15, வியாழக்கிழமை,

ஏகாதசி திதி இரவு 11.50 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

அனுஷம் நட்சத்திரம் காலை 07.40 வரை பின்பு கேட்டை.

சித்த யோகம் காலை 07.40 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 0.

ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

மேஷம்

இன்று உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சற்று கால தாமதம் இருக்கும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிறிய உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். தொழிலில் பங்குதாரர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

இன்று புதிதாய் வியாபாரம் தொடங்குவதற்கான முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். பணி நிமித்தம் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். உறவினர்களின் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைக் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கப்பெறும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.

மிதுனம்

இன்று உடல் நலம் சீராகும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிதாய் பொருட்கள் வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும்.

கடகம்

இன்று இல்லத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் வழியில் செலவுகள் இருக்கும். தொழிலில் பங்குதாரர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்தால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளினால் மன அழுத்தம் ஏற்படும். இல்லத்தில் நிம்மதியற்ற சூழல் உருவாகக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களிடம்  அனுசரித்து செல்வது நல்லது. இதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். எதிர்பார்த்த நேரத்தில் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.

கன்னி

இன்று செய்யும் எந்த செயலையும் துணிச்சலோடு தைரியத்தோடும் செய்து அதில் வெற்றியே கிடைக்கும். பணியில் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க பெறும். தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு லாபம் இருக்கும். வீட்டின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.

துலாம்

இன்று இல்லத்தில் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழலும் உருவாகும். உடன்பிறந்தவர்களின் உதவிகளும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் நன்மை நடக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது மூலம் பணப் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் வீடு தேடி வரும். இல்லத்தில் ஒற்றுமை பலப்படும். பெண்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பொன் பொருள் வாங்குவதற்கான யோகம் சிலருக்கு உண்டு.

தனுசு

இன்று பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன்-மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உருவாகும். இல்லத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பணியில் இருக்கும் சுமையை சக பணியாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

மகரம்

இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும் பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். பணியில் இருந்த எதிரிகளின் இடையூறு அகன்று போகும்.

கும்பம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும். புதிய வேலைவாய்ப்புகள் வெளியூரிலிருந்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல்நலம் சீராக இருக்கும். தொழிலில் பணியாளர்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்

இன்று எதிர்பாராத செலவுகள் வீட்டில் ஏற்படும். உடல் நலம் சற்று மந்தமாகவே இருக்கும். உதவி கிடைப்பதற்கு சற்று கால தாமதம் ஏற்படலாம். தொழிலில் பங்குதாரர்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவது வர இருக்கும் சிக்கலை சமாளிக்க உதவுவதோடு, லாபத்தை அதிகரிக்க செய்யும். கடன் பிரச்சினை குறையும்.

Categories

Tech |