சிறப்பான சிந்தனை திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் உற்சாகம் நிறைந்த பணி நல்ல பலன்களை பெற்றுக்கொடுக்கும். உறவினர் நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சிகள் உருவாகும். பண பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். நீங்களும் உடல்நிலையை கொஞ்சம் கவனமாக பார்த்துக் -கொள்ளுங்கள். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தவர் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மட்டும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உங்களுடைய கௌரவம் உயரும். மற்றவர்களிடமும் நல்ல மதிப்பை பெறக்கூடும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் அனைத்து பிரச்சினைகளையும் தூக்கி போட்டுவிட்டு குடும்பத்தாருடன் மனம் மகிழ்ச்சியாக சந்தோசமாக தீபாவளியை கொண்டாடுங்கள். அதுபோலவே முடிந்தால் இன்று நீங்கள் சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்