Categories
தேசிய செய்திகள்

இனி சரக்கு… வீட்டிற்கே டோர் டெலிவரி….. சொமேட்டோ நிறுவனம் அதிரடி

மது பாட்டில்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய சொமேட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அந்த வகையில்,

மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் மது விற்பனையால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதுடன் பல்வேறு குடும்பங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என பல சமுக ஆர்வலர்கள் எச்சரித்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மதுவை டோர் டெலிவரி செய்யலாமா என தமிழக அரசிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பின் திட்டவட்டமாக முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுமொட்டோ நிறுவனம் மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மது வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யப்படும் என்றும், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |