சென்னையில் மண்டல வாரியாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த முழு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , திருவள்ளுர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
திருவொற்றியூர் -13, மணலி -1 , மாதவரம் -3, தண்டையார்பேட்டை- 59, ராயபுரம்- 133 , திருவிக நகர் -55, அம்பத்தூர் -1 , அண்ணாநகர் -39, தேனாம்பேட்டை -53, கோடம்பாக்கம் – 52, வளசரவாக்கம்- 13, ஆலந்தூர் – 9 , அடையார் – 10 பெருங்குடி – 8 சோழிங்கநல்லூர் -2 , இதர மாவட்டம் -1 என மொத்தம் 452 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.