மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனோவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.
ராயபுரத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. திருவிக நகர் – 33, கோடம்பாக்கம் – 26, அண்ணாநகர் – 24, தண்டையார்பேட்டையில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை – 19, அடையாறு, பெருங்குடி தலா 7, திருவொற்றியூர், வளசரவாக்கம் தலா 5 பேர், மாதவரம் – 3, சோழிங்கநல்லூர் – 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.