Categories
உலக செய்திகள்

zoom மீட்டிங் மூலம் வழக்கு விசாரணை… ஆபரேஷன் தியேட்டரிலிருந்து ஆஜரான மருத்துவர்… கண்டித்த நீதிபதி…!!

கலிபோர்னியாவில் மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் செய்யும் இடத்திலிருந்து zoom மீட்டிங் மூலம் வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸினால் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால்,  நீதிமன்ற வழக்கு, அலுவலக பணி, குழந்தைகளின் கல்வி போன்றவை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று கலிபோர்னியாவில் ஆன்லைன் மூலம் ஒரு நீதிமன்ற வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கலிபோர்னியாவில் வசிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரும்  மருத்துவருமான  ஸ்காட்  கிரீன் என்பவர்  மீது சாலை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனால் நீதிபதி அவரை “zoom” மீட்டிங் மூலம் சரியான நேரத்தில் ஆஜராகும்படி கூறினார். அந்த மீட்டிங்கை  அட்டென்ட் செய்த ஸ்காட்-டிடம் நீதிமன்றத்தின் கிளார்க் விசாரணைக்கு தயாராக இருக்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் ஸ்காட்,  “நான் தயாராக இருக்கிறேன். வழக்கு விசாரணையை தொடங்கலாம்” என்று கூறினார். நீதிமன்ற கமிஷனர் கேரி லிங்க் என்பவரும் அந்த மீட்டிங்கில் இணைந்தார். அப்போது மருத்துவர் கிரீன் ஸ்காட்  மருத்துவ உடை அணிந்து ஆபரேஷன் தியேட்டரில் இருப்பதைப் பார்த்து கேரி லிங்க் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் அவர் நோயாளிகளின் நலன் தான் முக்கியம் வழக்கை பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் மருத்துவர் ஸ்காட்,  “நான் ஆபரேஷன் செய்யவில்லை. வேறு ஒரு மருத்துவர் தான்  ஆபரேஷன் செய்கிறார். நான் அவருடன் உதவிக்கு இருக்கிறேன்” என்று கூறினார். இருப்பினும் நீதிபதி, நீங்கள் மருத்துவ பணியில் இல்லாத நாளில் நாம் வழக்கு விசாரணை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு மற்றொரு தேதியை குறிப்பிட்டு அந்த நாளில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

Categories

Tech |